சென்னை: தமிழக துணை முதல்வர் பதவியேற்ற ஓபிஎஸ்.,க்கு, பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

அதிமுக.,வில் பிளவுபட்டிருந்த ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள், இன்று ஒன்றிணைந்தன. இதன் பலனாக, ஓ.பன்னீர்செல்வத்திற்கு, துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக, இன்று மாலையே ஓபிஎஸ் துணை முதல்வர் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

துணை முதல்வர் பதவியுடன், நிதி மற்றும் வீட்டு வசதித் துறையையும், கூடுதல் பொறுப்பாக, பன்னீர்செல்வம் கவனிக்க உள்ளார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ‘’தமிழக துணை முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாழ்த்துகள். தமிழகம் புதிய உச்சத்தை தொட விரும்புகிறேன்,’’ எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here