முதல்வர் பழனிசாமி மற்றும் சபாநாயகருக்கு சேலை அனுப்பிய 8 பேர் கைது

0
86

ஈரோடு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டப்பேரவை சபாநாயகருக்கு சேலை அனுப்பிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக அரசியல் சூழல் காரணமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் ஆகியோர் மீது டிடிவி தினகரன் கோஷ்டியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், டிடிவி தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்எல்ஏ.,க்களை தகுதிநீக்கம் செய்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சபாநாயகருக்கு, ஈரோட்டில் இருந்து 8 பேர் சேலை அனுப்பியுள்ளனர். உங்களுக்கு வேட்டி எதற்கு, சேலையை கட்டிக் கொள்ளுங்கள் என்றும் அவர்கள் விமர்சித்திருந்தனர்.

இதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார், அந்த 8 பேரையும் இன்று கைது செய்தனர். ஆனால், அவர்கள் மீது எந்த பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்வது என்ற குழப்பத்தில் போலீசார் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here