தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

0
65

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக, மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.கடந்த 24 மணிநேரத்தில் சின்னக்கல்லாரில் 5 செ.மீ., வால்பாறையில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தென்மேற்கு திசையில் இருந்து 35 – 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். கடல் அலைகள் 3.5மீ., – 3.7 மீ., வரை கடல் அலைகள் எழும்பக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here