புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு

0
43

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’தென்மேற்கு வங்க கடல் மற்றும் ஒட்டியுள்ள இலங்கை பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், வரும் 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரில் இடைவெளி விட்டு மித மழையும் சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது,’’ எனக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here