சென்னை: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ.11,000 கோடி கடன் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெறுகிறது. இதன்படி, இன்றைய (ஜூன் 12) கூட்டத்தொடரில், முதல்வர் பழனிசாமி 110வது விதியின்கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம் பின்வருமாறு:

* அணைகளில் நீர் ஆவியாவதை தடுக்க ரூ.1,125 கோடியில் மிதக்கும் சூரிய மின் சக்தி நிலையங்கள் அமைக்கப்படும்.

* 10 இடங்களில் 110 கிலோவாட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

* சென்னை 6 இடங்களில் ரூ.932 கோடியில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

* சேலம், எடபபாடியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

* புதிய எரிசக்தி கொள்கை உருவாக்கப்படும்.

* மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக்கடன் வழங்கப்படும்.

* ஊரகப்பகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைக்க ரூ.100 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்

* ஊரக பகுதியில சுத்தமான குடிநீர் கிடைக்க, ரூ.100 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையஙகள் அமைக்கப்படும்.

* ரூ.87 கோடியில 1,000 அங்கன்வாடிகள் அமைக்கப்படும்.

* ஊரக பகுதியில் 2.50 லட்சம் உரிஞ்சுக்குழிகள் அமைக்கப்படும்.

* 51 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளில் ரூ.217 கோடியில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

* மாநகராடசி, நகராடசி ஊராட்சி மன்றங்களில் 1,350 கி.மீ., நீளத்திற்கு 1000 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்

* ரூ.192.80 கோடியில் ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here