பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு: நடுத்தர மக்கள் அவதி

0
32

சென்னை: பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், நடுத்தர மக்கள் அவதியடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிவடைந்து வருகிறது. அத்துடன், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களது ஏற்றுமதி அளவை குறைத்துவிட்டன. இதன்காரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துடன் நீடிக்கிறது.

இதையடுத்து, இந்திய அளவில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. முன்பு மாதம் 2 முறை எரிபொருள் விலை திருத்தியமைக்கப்பட்ட நிலையில், தற்போது தினசரி பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படுகிறது.

இதன்படி, மே 17ம் தேதி நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.78.16 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு, 70.49 என்றும் உள்ளது. 2018ம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, 100 ரூபாயை கடந்துவிடும் என்று, சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here