வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவியின் சொல்லை அப்படியே பின்பற்றும் நபராக உள்ளார் என்று, தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபரான டிரம்ப், கடுமையான நடவடிக்கைகளுக்குச் சொந்தக்காரர் என அறியப்படுகிறார். இதன்படி, அதிபர் பதவியேற்ற நாளில் இருந்து, அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து, அமெரிக்காவில் அகதிகளாக ஊடுருவும் மக்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக, அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் நீண்ட தடுப்புச் சுவர் ஒன்றை கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மெக்சிகோவில் இருந்து அகதிகளாக ஊடுருவும் அப்பாவி மக்கள் சந்திக்கும் துன்பங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் வெளியாகி, பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு, பலரும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், அதிபர் டிரம்பின் மனைவி மெலனியாவும் கண்டனம் தெரிவித்தார். அகதிகளை கைது செய்யும்போது, போலீசார் மனிதாபிமானம் காட்ட வேண்டும் என்று, அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதன் அடிப்படையில், அதிபர் டிரம்ப் தற்போது புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மெக்சிகோ அகதிகளை கைது செய்யும்போது, பெற்றோரையும், குழந்தைகளையும் தனித்தனியாக பிரித்து சித்ரவதை செய்யாமல், ஒரே இடத்தில் வைத்து பாதுகாக்கும்படி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here