பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பற்றி வெளியாகும் கருத்துக் கணிப்பு விவரங்களால் அம்மாநில மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்புக்கு இடையே சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இதில், 70 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

வாக்குப் பதிவு முடிந்த நிலையில், யார் இந்த தேர்தலில் வெற்றிபெறுவார்கள் எனக் கூறி, பல்வேறு ஊடகங்களும் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால், அந்த கருத்துக் கணிப்பு விவரங்கள் பலவும் கர்நாடகா மக்களை குழப்புவதாக உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக.,வுக்கும் இடையே மிகக்குறைவான வெற்றி வித்தியாசமே உள்ளதாக, இந்த கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்படுகிறது.

அதன் விவரம் பின்வருமாறு:

இந்தியா டுடே: பா.ஜ.க – 79 -92 இடங்கள்; காங்கிரஸ் – 106-118 இடங்கள்

ரிபப்ளிக் டிவி: பா.ஜ.க – 95 -114 இடங்கள்; காங்கிரஸ் – 73-82 இடங்கள்

சிஎன்என்: பா.ஜ.க – 79 -82 இடங்கள்; காங்கிரஸ் – 106-118 இடங்கள்

என்டிடிவி: பா.ஜ.க – 80 -93 இடங்கள்; காங்கிரஸ் – 106-118 இடங்கள்

டைம்ஸ் நவ்: காங்கிரஸ் 90-103; பா.ஜ.க – 80-93 இடங்கள்

ஏபிபி: பா.ஜ.க – 101 – 103;  காங்கிரஸ் – 82 – 94 இடங்கள்

ஆஜ்தக்: பா.ஜ.க – 79- 92 இடங்கள்; காங்கிரஸ் – 106-118 இடங்கள்

நியூஸ் நேசன்: காங்கிரஸ் 97; பா.ஜ.க – 87 இடங்கள்

சிஎன்எக்ஸ்: பா.ஜ.க – 102-110; காங்கிரஸ் – 72-78 இடங்கள்

சி-வோட்டர்: பா.ஜ.க, 97-109; காங்கிரஸ் – 87-99 இடங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here