டிராபிக் ராமசாமியாக ரஜினியை நடிக்க வைக்க விரும்பினேன்: ஷங்கர்

0
47

சென்னை: டிராபிக் ராமசாமியாக, சூப்பர் ஸ்டார் ரஜினியை நடிக்க வைக்க திட்டமிட்டேன் என்று, இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு, அவரது பெயரிலேயே படமாக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், டிராபிக் ராமசாமி வேடத்தில் நடிக்க, அவரது மனைவியாக ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ‘’டிராபிக் ராமசாமி என்னை பாதித்த நபர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. அவரது கதையை படமாக எடுக்க ஆசைப்பட்டேன். அவரது வேடத்தில் ரஜினியை நடிக்க வைக்க நினைத்திருந்தேன். ஆனால், எஸ்ஏசி நடிக்கிறார் என்றதும் வட போச்சே என ஏமாற்றம் அடைந்தேன். இருந்தாலும், டிராபிக் ராமசாமி கதை படமாக எடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது,’’ எனப் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here