டெல்லி: 2019ம் ஆண்டு வர உள்ள இந்திய குடியரசு தினத்தில் பங்கேற்கும்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பும், இந்திய பிரதமர் மோடியும் நெருங்கிய நட்பு பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 2019ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ள இந்திய குடியரசு தினத்தில் பங்கேற்க அழைப்பு தரப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக் கொண்டுள்ளதாக, அமெரிக்க அதிபரின் தலைமை அலுவலகமாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக, 2015ம் ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here