மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 3000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு

0
103

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், 3 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

சிஎன்பிசி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. சத்ய நடெல்லா தலைமையிலான மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விற்பனைப் பிரிவு செயல்பாடுகள் எதிர்பார்த்தபடி இல்லை என, சமீப நாட்களாக, அதிருப்தி கூறிவருகிறது.

விற்பனை சரிவு; ஆட்களை குறைக்கும் மைக்ரோசாஃப்ட்!

இதன் அடிப்படையில், சர்வதேச அளவில் தனது ஊழியர் எண்ணிக்கையில் இருந்து, 3 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது. ”கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் எதிர்பார்த்த பணி ஒப்பந்தங்கள் கிடைக்காததே, விற்பனை வருமானம் பாதிக்க காரணம்,” என்றும் மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது.

தற்போதைய நிலையில், உலக அளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒரு லட்சத்து, 21 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அமெரிக்காவில் மட்டும் 71,000 பேர் பணிபுரிவதும் குறிப்பிடத்தக்கது.

English Summary: Technology giant Microsoft planning to cut about 3,000 jobs from its global workforce.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here