சென்னை: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அரசியல் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் ரஜினி அரசியலுக்கு வருவாரா, இல்லையா என கேள்வி எழுவதும், அவரது ரசிகர்கள் கோரிக்கை வைப்பதும் வழக்கமாக உள்ளது. ஆனாலும், ரஜினி இதுவரை எந்த முடிவையும் அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறார்.

ஜெயலலிதா இறந்ததை தொடர்ந்து, ரஜினி எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வருவார் எனக் கூறப்பட்டது. இதற்கேற்ப, அவ்வப்போது அரசியல் பற்றி காரசாரமான கருத்துகளை கூறி, ரஜினி பரபரப்பை ஏற்படுத்தினார்.

போருக்குத் தயாராக இருங்கள் என்றும் ரசிகர்களிடம் அவர் கூறினார். இந்நிலையில் இன்று அவரது 67வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இன்றேனும் அரசியலுக்கு வருவது பற்றி அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

எனினும், ரஜினி அமைதியாகவே உள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here