இந்தியாவில் ஜனநாயகம் தோற்றுவிட்டது: ராகுல் காந்தி வேதனை

0
46

டெல்லி: இந்தியாவில் ஜனநாயகம் தோற்றுவிட்டது என்று, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில், பெரும்பான்மை பெறாத நிலையிலும், மத்திய அரசின் உதவியுடன், பாஜக அங்கு ஆட்சியமைத்துள்ளது. எடியூரப்பா முதல்வராக பதவியேற்றும் உள்ளார்.

இந்த நிகழ்வு பல தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மைனாரிட்டி பலம் உள்ள கட்சி, தனித்து ஆட்சியமைப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், இதுபற்றி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் கூறுகையில், ‘’பா.ஜ.க.,வின் பகுத்தறிவற்ற செயலால், போதிய பெரும்பான்மை எண்ணிக்கை இல்லாத போதிலும் கர்நாடகாவில் ஆட்சி அமைத்து, அரசியலமைப்பை கேலிக் கூத்தாக்கி உள்ளது.

இந்த காலைப் பொழுதில் வெற்று வெற்றியை பா.ஜ.க., கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் தோற்றகடிக்கப்பட்டதற்காக இந்தியா வருந்தும்,’’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here