சசிகலா உறவினர் வீடுகளில் 2வது நாளாக ரெய்டு!

0
63

சென்னை, நவ.,10- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சசிகலா உறவினர்களின் வீடு, அலுவலகங்களில், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ரெய்டு நடைபெற்று வருகிறது.

சுமார் 150க்கும் மேலான இடங்களில் இந்த சோதனை நீடிக்கிறது. முதல் நாளான நேற்று, 187 இடங்களில் சோதனை நடந்த நிலையில், அதனை சற்று குறைத்துள்ளனர்.

40 இடங்களில் சோதனை முடிவடைந்த காரணத்தால், தற்போது, இதர 147 இடங்களில் சோதனை நடத்துவதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி, சென்னையில் ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர்., பத்திரிக்கை அலுவலகம், இளவரசியின் மகன் விவேக் வீடு, மகள் கிருஷ்ணபிரியாவின் வீடு, தஞ்சையில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவனின் வீடு, டாக்டர் வெங்கடேசின் நண்பர் ராஜேஸ்வரனின் வீடு, கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் உள்ள தினகரனின் ஜோதிடர் சந்திரசேகர் வீடு, நாமக்கலில் உள்ள சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் மற்றும் அவரிடம் பணியாற்றிய பாண்டியனின் வீடு, சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மன்னார்குடி வீடு, நீலகிரி மாவட்டம் கோடநாடு கர்சன் பகுதியில் உள்ள க்ரீன் டீ எஸ்டேட், வழக்கறிஞர் செந்திலின் நண்பர் பால சுப்ரமணியனின் வீடு, டிஎம்பிஎஸ்சி உறுப்பினர்கள் ஏ.வி.வேலுவின் வீடு உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இது தவிர புதுச்சேரி ஸ்ரீலட்சுமி ஜூவல்லர்ஸ் நகைக்கடை, ஆரோவில் அருகில் உள்ள தினகரனின் பண்ணை வீடு ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள திவாகரனின் கார் டிரைவர் வினோத் வீட்டிலும் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here