சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இன்றைய (ஜூன் 29) கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 110வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம் பின்வருமாறு:

* செப்டம்பர் மாதம் 16ம் தேதியன்று வரும் ராமசாமி படையாச்சி பிறந்த நாள் மற்றும் அக்டோபர் 1ம் தேதியன்று வரும் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் ஆகியவை அரசு விழாவாக கொண்டாடப்படும்.

*சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க அடையாறு, கூவம் கரையோர பகுதிகளில் ரூ.100 கோடியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தை சீரமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here