‘’எங்களுக்கும் கல், சோடா பாட்டில் வீச தெரியும்,’’ என்று ஸ்ரீவில்லிபுத்துர் ஜீயர் பேசியுள்ளதால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஆண்டாள் சர்ச்சை விவகாரத்தில், வைரமுத்து மீது இன்னமும் ஐயங்கார் சமூகத்தினருக்கு கோபம் தணியாமல் உள்ளது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீவில்லிப்புத்துர் ஜீயர் , ‘’வைரமுத்து விவகாரத்தில் மென்மையான முறையில் போராடி வருகிறோம். எங்களுக்கும் கல், சோடா பாட்டில் வீச தெரியும். ஆனால், அதைச் செய்ய விருப்பம் இல்லை,’’ எனக் குறிப்பிட்டார்.

அவரது பேச்சு பல தரப்பிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளும் ஜீயர் ஒரு ரவுடி போல பேசுவது கண்டிக்கத்தக்கது என, விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here