இந்தியாவில் அதிகரிக்கும் தற்கொலை: அதிர்ச்சி தகவல்

0
41

டெல்லி: நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில், தற்கொலைகள் 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய சுகாதார கழகம் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2000-ம் ஆண்டில் 1,08,593 ஆக இருந்த தற்கொலை எண்ணிக்கை, 2015-ம் ஆண்டில் 1,33,623 ஆக உயர்ந்துள்ளது. இது 23 சதவீத உயர்வாகும். இவர்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 30 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள். 14 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் தற்கொலை விகிதம் ஒரு சதவீதமாகவும், 14 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் தற்கொலை விகிதம் 6 சதவீதமாகவும் உள்ளது. 45 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்களின் தற்கொலை விகிதம் 19 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் தற்கொலை விகிதம் 7.77 சதவீதமாகவும் உள்ளது.

தற்கொலை செய்து கொள்பவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம் என்று, அந்த புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here