தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் உயரும்!

0
80

தமிழகத்தின் வட மாவட்டங்களில், வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஓசூர், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் தலா 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

வெப்பச் சலனமாக காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here