தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு!

0
78

சென்னை: தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.

மூச்சுத் திணறல் காரணமாக, அவதிப்பட்டு வந்த பாலகுமாரன், சில நாட்கள் முன்பாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று (மே 15) உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு ரஜினிகாந்த் உள்பட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பாலகுமாரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி கிராமத்தில் 1946ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். ஏராளமான சிறுகதைகள், நாவல்களை தமிழில் எழுதி, இலக்கியத்திற்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.

மெர்குரி பூக்கள், இரும்பு குதிரைகள், உடையார் உள்ளிட்டவை இவரது எழுத்தில் புகழ்பெற்ற படைப்புகளாகும். தமிழ் சினிமாத்துறையிலும் பாலகுமாரன் பங்களிப்பு செய்துள்ளார். கடந்த 1988ம் ஆண்டு பாக்யராஜ், ஷோபனா நடித்த இது நம்ம ஆளு என்ற படத்தை பாலகுமாரன் இயக்கியுள்ளார்.

அத்துடன், நாயகன், குணா, ஜென்டில்மேன், பாட்ஷா, காதலன், ஜீன்ஸ், முகவரி, சிட்டிசன், புதுப்பேட்டை, வல்லவன் உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here