சென்னை: நடிகர் கமல்ஹாசன் அமெரிக்க அதிபரை சந்தித்தாலும் பிரச்னை இல்லை என்று, தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வருகிறார். இதன்படி, தற்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும், கமல்ஹாசன் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழகம் முழுவதும் பெரும் விவாதம் எழுந்துள்ளது. இதுபற்றி தமிழக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடிகர் கமல்ஹாசன் சினிமா படம்போல அரசியலையும் நினைத்து செயல்படுகிறார். யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அதனால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. கட்சித் தலைவர் என கூறிக்கொண்டு, அவர் எங்கெங்கோ சென்று வருகிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரைக்கூட கமல்ஹாசன் சந்திக்கட்டும்.

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here