டெல்லி: ‘’பாஜக மூத்த தலைவர் வாஜ்பாய் உடல்நிலை சீராக உள்ளது,’’ என்று எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய் (94), திடீர் உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவரது உடல்நிலையில் பாதிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை இதுபற்றி விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘’நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடல்நிலை சீராக உள்ளது. அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர் உடல் உறுப்புகள் அனைத்தும் நன்றாக செயல்படுகின்றன. நோய் தொற்று கட்டுப்படும் வரை, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here