கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாட்டாள் நாகராஜ் படுதோல்வி

0
34

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலில், கன்னட மொழி வெறியாளர் வாட்டாள் நாகராஜ் படுதோல்வி அடைந்துள்ளார்.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக போராடி வருபவர் வாட்டாள் நாகராஜ். இவர் கன்னட அமைப்புகளை உசுப்பேற்றி, தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட செய்வதும் வழக்கம்.

இந்நிலையில், வாட்டாள் நாகராஜ் தனது மக்கள் செல்வாக்கை பயன்படுத்தி, தற்போது நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற நினைத்தார். இதன்படி, சாம்ராஜ் நகரில் கன்னட அமைப்பு சார்பாக, போட்டியிட்ட அவர் வெறும் 5,648 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளார்.

கன்னட மொழி வெறியை வளர்த்து அரசியல் செய்து வரும் வாட்டாள் நாகராஜின் பதவி ஆசைக்கு, அவரது சொந்த மாநில மக்களே சாவுமணி  அடித்துள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here