காமராஜர் நினைவிடம், ஜெயலலிதா சமாதியில் நடிகர் விஷால் மரியாதை

0
73

சென்னை: முன்னாள் முதல்வர்கள் காமராஜர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்தில் நடிகர் விஷால் மரியாதை செலுத்தினார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கவுள்ளார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதையொட்டி, காமராஜரின் நினைவிடம் சென்ற அவர் அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று, ஜெயலலிதா நினைவிடம் சென்று மலர் மரியாதை செலுத்த உள்ளதாகவும், அதன்பிறகு ஆர்கே நகரில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here