கர்நாடகாவில் ஆட்சியமைப்பது யார்?- இழுபறி நீடிப்பதால் குழப்பம்

0
55

பெங்களூரு: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடந்து முடிந்துள்ள கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், வெற்றிபெற்றாலும் பாஜக ஆட்சியமைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

காரணம், பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. அதேசமயம், ஆளுங்கட்சியான காங்கிரஸ் 78 இடங்களில் வென்றுள்ளதோடு, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோர்த்துள்ளது.

தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியுடன் இந்த கட்சி கூட்டணி அமைக்க இசைந்துள்ளது. இவர்கள் கூட்டணிக்கு, ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டி உள்ளது. ஆனால், பாஜக.,வுக்கு இன்னும் 8 இடங்கள் குறைவாக உள்ளன.

இதனால், யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜக சார்பாக, எடியூரப்பாவும், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பாக, குமாரசாமியும் ஆட்சியமைக்க, ஆளுநரின் ஆதரவை கோரியுள்ளனர். இவர்களில் யாருக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று தெரியவில்லை.

அதேசமயம், இன்னும் 10 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, எடியூரப்பாவுக்கு ஆளுநர் கெடு விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here