பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில், காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் நாடகம் ஆடுவதாக, முதல்வர் எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வராக இன்று (மே 17) பதவியேற்ற எடியூரப்பா, அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘’கர்நாடக மக்கள், தாம் விரும்பியவர்களுக்கு வாக்களித்து, வெற்றி பெற வைத்துள்ளனர். நாங்கள் மக்களின் ஆதரவு பெற்றவர்கள். ஆனால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகின்றன. அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது,’’ எனக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here