கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு!

0
28

பெங்களூரு: பெரும் பரபரப்புக்கு இடையே கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில், பாஜக 104 இடங்களில் வென்றது. ஆனால், காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் திடீரென கூட்டணி அமைப்பதாக அறிவித்தன. அத்துடன், தங்களிடம் 115 எம்எல்ஏ.,க்கள் உள்ளதால், ஆட்சி அமைக்க எங்களுக்கே உரிமை உள்ளதென்றும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், திடீரென ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். ஆனால், அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இதை கண்டித்து, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

இதன்காரணமாக, கர்நாடகா மாநிலத்தில் பெரும் அரசியல் பரபரப்பு நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here